பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,  கொரோனா அறிகுறியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மிகவும் உருக்கமாக ஒரு தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.

நேற்றைய முன் தினம், நடிகர் அமிதாப் பச்சன் “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் தீயாய் வெடிக்க துவங்கியது.

இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் அவரது மகள் ஆகியோருக்கும் சோதனை செய்யப்பட்டதில், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே அவரும் மருத்துவமனையில் மணிமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, ஜெயா பச்சனை தவிர, ஐஸ்வர்யா ராய், மற்றும் அவருடைய மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இருவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டது. மேலும், அவருடைய பங்களாவையே தடை செய்யப்பட்ட இடமாக மாற்றியுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப், மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார். இதில், ரசிகர்கள் எங்கள் மீது தொடர்ந்து அக்கறை காட்டிவருகிறீர்கள், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா, மற்றும் எனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்த இணையில்லாத அன்பிற்கு, இரு கரம் கூப்பி நன்றி கூறுகிறேன் என பதிவிட்டுள்ளார். 


இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், விரைவில் அவர் உடல் நலம் தேறி வர வேண்டும் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.