அமிதாப் பச்சன்

1969 ம் ஆண்டு வெளியான சாத் இந்துஸ்தானி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமிதாப் பச்சன்.தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனது நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்த இவர் இந்த வயதிலும் படத்திற்கு தகுந்தாற் போல தன்னை மாற்றி தன்னுடைய கதாபாத்திரத்திற்காக எடுக்கும் முயற்சிகளை கண்டு இந்த தலைமுறை நடிகர்களும் வியந்து போகின்றனர்.

பாசம்

தற்போது 102 ஆல் அவுட் என்ற படத்தில் நடித்து வருகிறார் அமிதாப்பச்சன்.இதில் 102 வயது முதியவராக நடிக்கிறார் அமிதாப்.102 வயதாகும் அமிதாப்புக்கும் அவரது 75 வயது மகனுக்கும்  இடையே நடக்கும் பாசப் போராட்டங்கள் தான் கதையாம்.

அடையாளம்

மேலும் இப்படத்திற்காக அமிதாப் முழுவதும் வெள்ளையான முடி மற்றும் தாடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.இதில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு முழுவதுமாக மாறியிருக்கிறார்.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்