Amitabh Bachchan: என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது..! ரஜினியின் பதிவுக்கு பதில் ட்வீட் போட்ட அமிதாப் பச்சன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சனுடன் 33 வருடங்களுக்கு பின்னர் இணைந்து நடிப்பது குறித்து, தன்னுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், இதற்க்கு பதில் ட்விட் போட்டுள்ளார் அமிதாப்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துவங்கிய நிலையில், இதை தொடர்ந்து திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. குறிப்பாக, அமிதாப் பச்சன் மிக முக்கிய ரோலில் இப்படத்தில் நடிக்கிறார். இவரை தவிர பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது குறித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டிருந்த பதிவில், "33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என கூறியிருந்தார்.
இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.." ரஜினிகாந்த் சார் நீங்கள் என் மீது மிகவும் கருணை காட்டுகிறீர்கள், ஆனால் படத்தின் தலைப்பைப் பாருங்கள், அதில் தலைவர் 170 என உள்ளது. தலைவர் என்றால்.. லீடர், ஹெட், மற்றும் சீஃப், நீங்கள் தான் லீடர், நீங்கள் தான் ஹெட், நீங்கள் தான் சீஃப். இதில் ஏதாவது சந்தேகம் இருக்கா மக்களே? என்னை உங்களுடன் ஒப்பிட முடியாது. மீண்டும் உங்களுடன் பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D