Amir Pavani : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி உடன் நடனமாடிய அமீர், அவருக்கு ஏராளமான காதல் பரிசுகளை கொடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்கிற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவனி. இந்த தொடரில் அவர் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியல் பெரிய அளவில் ஹிட் ஆகாவிட்டாலும், இவர் அடுத்ததாக பிரஜனுக்கு ஜோடியாக நடித்த சின்னத்தம்பி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இந்த தொடரின் மூலம் நடிகை பாவனிக்கு ரசிகர் வட்டமும் பெரிதானது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னட சீரியல் நடிகர் பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாவனி. திருமணமான மூன்றே மாதத்தில் பிரதீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாவனி சீரியலில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்... ரச்சிதா உடன் என்னதான் பிரச்சனை... விவாகரத்து செய்தது உண்மையா? - முதன்முறையாக மனம்திறந்த தினேஷ்

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் பாவனி. அந்நிகழ்ச்சியில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். முதலில் அபினய் உடனும், பின்னர் அமீர் உடனும் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பாவனி, அதில் அமீர் உடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
சமீபத்தில் அமீரின் பிறந்தநாளன்று அவரை காதலிப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது மிகவும் வைரல் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசுகளை கொடுத்து கண்கலங்க வைத்துள்ளார். இதுகுறித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் இறுதியில் அமீர் மோதிரம் ஒன்றையும் தருகிறார். ஆனால் அதனை பாவனி வாங்காமல் தயங்கி நிற்பது போன்ற காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... தளபதி 67-ல் டுவிஸ்ட் வைத்த லோகேஷ்... சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

