உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து ஒரு வழி செய்து வருகிறது. அந்த வகையில் சாதாரண மக்கள் முதல் நடிகை நடிகர்கள்,அரசியல் வாதிகள் என பலரும் கொரோனாவால் பெரும் பாதிப்புக்குளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவது ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ,இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் பிளம் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். பாப் இசை உலகை பொறுத்தவரை 73 வயதாகும்  ஹாலிவுட் பாடகர், மற்றும் பாடலாசிரியரான ஜான் பிரின், அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தது இசை பிரியர்களை மிகுந்த தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

இந்நிலையில் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பாடகரான டிராய் ஸ்னீட் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட டிராய் புளோரிடா மாகணம் ஜாக்சன்வில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், 52 வயதான டிராய் ஸ்னீட் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

1999ம் ஆண்டு வெளியான யூத் ஃபார் கிறிஸ்துவின் "ஹையர்" ஆல்பத்துக்காக கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். “ஹையர்”, “தி ஸ்டரகில் இஸ் ஓவர்“, “யூத் பார் கிறிஸ்ட்” உள்பட பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார். “தி பிரீச்சர்ஸ் ஒய்ப்” என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.