ameerkhan turn to Goodwill ambassador for china
இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்று பயணம் செய்து வரும் நிலையில், அவர் சீன அதிபரை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்தும் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய, சீனா உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்ப்பட்டுள்ளதாம்.
சீன அரசின் நல்லெண்ண தூதராக, பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், பீகே, தங்கள், உள்ளிட்ட படங்கள் சீனாவிலும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. 
இதனால் சீன மக்களின் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டதால், இவரையே சீனாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூ சின் இங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமீர்கானை சீன மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும், நான் உட்பட சீனர்கள் பலரும் அவரது ரசிகர்கள் என்று கூறி, அமீர்கானுக்கு கிடைத்த இந்த புதிய பதவிகாக அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
