Amazon Prime is the way to eliminate the Tamil rockers - RJ balaji

தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக வளர்ந்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி.

இவரும், கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ள “இவன் தந்திரன்” படத்தின் இசை வெளியீடு நேற்று நடைப்பெற்றது.

இதில் பாலாஜி பினவருமாறு பேசினார், “தமிழ் சினிமாவில் பைரசி பற்றி நீண்டகாலம் விவாதித்து வருகிறோம்.

இதை ஒழிப்பது கடினம், விசிடி, டிவிடி மாறி தற்போது இணையத்துக்கு வந்துள்ளது. ஹாலிவுட் வரை இந்தப் பிரச்சனை உள்ளது.

தமிழ் ராக்கர்ஸை ஒழித்தால் மட்டும் இது நிற்காது. இன்னும் 10 பேர் இதேபோல் வருவார்கள்.

இதற்கு மாற்றாக நமது படங்களை “அமேசான் பிரைம்” போன்ற வணிக இணைய தளங்களுக்கு விற்று லாபம் அடையலாம்” என்று கூறியுள்ளார்.