கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் அமரன். இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து உள்ளது. அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதன்முறை ஆகும்.

அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாகும். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறி நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கமல் 65ஐ கொண்டாடிய Thug Life படக்குழு.. யங் பாய் போல கத்தி கூச்சலிட்டு உற்சாகப்படுத்திய மணிரத்னம்! Viral Video

அதன்படி அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அமரன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் காஷ்மீரில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இதுதவிர அதில் சர்ப்ரைஸ் பாடல் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது. தேசபக்தி பாடலான இதை கமல்ஹாசன் தான் பாடி இருக்கிறார். ‘போர் செல்லும் வீரன்... ஒரு தாய் மகன் தான்... நம்மிள் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.. பாரடா’ என்கிற உணர்வுப்பூர்வமான வரிகளுடன் கூடிய அப்பாடல் அந்த மேக்கிங் வீடியோவில் ஒரு ஹைலைட்டாக உள்ளது. இந்த மேக்கிங் வீடியோவிலும் சாய் பல்லவி குறித்து ஒரு காட்சி கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... இப்படி மாட்டிகிட்டியே குமாரு! நடிகையுடன் காதல்... சிவகார்த்திகேயன் பற்றி தனுஷ் கொளுத்திப்போட்ட கிசுகிசு