தனது ‘ஆடை’பட பப்ளிசிட்டிக்காக சென்னையில் உள்ள அத்தனை தியேட்டர்களுக்கும் விசிட் அடித்துக்கொண்டிருக்கும் நடிகை அமலா பால் படம் பார்த்து திரும்பும் ரசிகர்கள் முன் மைக்கை நீட்டி அதிர்ச்சி அளிக்கிறார்.

நடிகை அமலா பாலின் ஆடை படம் கடந்த சனியன்று ரிலீஸாகி ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் சம்பளத்தின் ஒரு பகுதையை விட்டுக்கொடுத்ததோடு, பட ரிலீஸுக்கும் 25 லட்சம் கொடுத்து உதவிய அமலா பால் இப்படம் ஹிட் ஆனால்தான் அடுத்து இண்டஸ்ட்ரியில் நீடித்து நிலைக்கமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

அதற்காக அதிகமாக மெனக்கெடும் அவர் தான் சென்னை தியேட்டர்களுக்கு ரசிகர்களிடம் கருத்துக்கேட்பதையும் தன்னை சற்றும் எதிரபாராத ரசிகர்கள் அதிர்ச்சி அடைவதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ... https://www.instagram.com/tv/B0PyD4tjeRE/?utm_source=ig_web_copy_link