நடிகை அமலாபால் காதலித்து கரம்பிடித்த இயக்குனர் விஜயை விவாகரத்து செய்தவுடன், முழுமையாக தன்னுடைய கவனத்தை நடிப்பில் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'வேலை இல்லா பட்டதாரி 2 " திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடி எதிரிபார்த்த வசூலை கொடுத்தது. மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக திருட்டு பயலே 2  திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது அமலாபால் கிளாமரான தோற்றத்துடன், ஒரு மரத்தில் சாய்த்தபடி புகை பிடிப்பது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதிலும் சிகரெட் புகையை அவர் மூக்கால் விடுவது தான் ஹை லைட். 

இந்த வீடியோவை பார்த்த பலர் இது அமலா பாலா என ஷாக்காக்கும் அளவிற்கு அந்த வீடியோவில் நடித்துள்ளார்.