மேயாத மான் ரத்தின குமார் இயக்கும் படமான அமலாபால் நடிக்கும் படம் "ஆடை"குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

யாரும் எதிர்பாராத அளவிற்கு நிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலாபால் இதுகுறித்து தெரிவிக்கும் போது, "இந்த படத்தில் ஆடை இல்லாமல் நிர்வாண காட்சியில் நடித்தது தர்மசங்கடம் என சொல்லமுடியாது.. பல்வேறு படங்களில் பல பாடல்களில் கவர்ச்சி காட்ட சொல்வாங்க..

அப்போதுதான் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி ஒரு கவர்ச்சியும் ஆபாசமும் இருக்காது. ரசிகர்களும் அந்தவகையிலேயே எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. மேலும் இந்த படத்தில் நிர்வாணமாக நடிக்க எனது பெற்றோரின் சம்மதத்துடன் தான் நடித்தேன்...

நான் நடிக்க வரும்போது, "என் அப்பா என்னிடம் சொல்லி இருந்தார். நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும் என்று.. எனவே நடிப்பு என வந்தாயிற்று எப்படி இருந்தாலும் நடித்தாக வேண்டும்... நிர்வாண காட்சியில் நடித்த பின்னர் தன்னை நல்ல வலிமைமிக்க ஒரு பெண்ணாக உணர்கிறேன்.

முதல் நாள் படப்பிடிப்பின்போது, பாதுகாப்பின்மை பற்றி வருத்தம் இருந்தது. ஆனால் பின்னர் அடுத்தடுத்து வரும் நாட்களில் எந்த ஒரு தர்ம சங்கடமும் இல்லை பயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.