amalapaul like pair with ajith

நடிகை அமலபால் விவாகரத்திற்கு பின் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் இவர் நடித்து வெளியாகியுள்ள திருட்டு பயலே 2 திரைப்படமும் வசூல் நீதியாகவும் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் ஏற்கனவே கோலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயுடன் தலைவா படத்தில் நடித்து விட்டார். இந்தப் படத்தை அமலா பாலின் முன்னாள் கணவர் எ.எல். விஜய் தான் இயக்கி இருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என தன்னுடைய மனதில் உள்ள ஆசையை வெளிப் படுத்தியுள்ளார் அமலாபால். 

தற்போது விவேகம் படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் தன்னுடைய 58வது படத்தையும், சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயம் தான். மேலும் அஜித் நடிக்க உள்ள விசுவாசம் படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அமலாபால் இப்படி கூறியுள்ளது அஜித்துக்கு நாயகியாக நடிக்க திரி கிள்ளு வது போல் உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.