நடிகர் அமலா இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014 காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு, விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து நடிகை அமலாபால் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.  கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான 'ஆடை' படத்தில் ஆபாச நடிகைகளுக்கு இணையாக 'ஆடையே' இல்லாமல்  நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து அவர் கொடுத்த சில பேட்டிகளில். ஒருவரை காதலித்து வருவதாக சூசகமாக அமலாபால் கூறிவந்தார்.  விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பேன் என்பது போலவும் தெரிவித்தார்.

 இதை தொடர்ந்து இவர் காதலித்து வரும் ஆணுடன் லிவிங்  டூ கெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் கோலிவுட் திரையுலகை பரபரப்பாகியது . 

சமீபத்தில் கூட அமலாபால், இசை கலைஞர் பவிந்தர் சிங்கை இறுக்கமாக கட்டி அணைத்தபடி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகியது. மேலும் பவிந்தரை தான் அமலாபால் காதலித்து வருவது உறுதியானது.

இந்நிலையில் இவர்கள் திருமணம் கொரோனா பீதிக்கு இடையே அவசர அவசரமாக நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அமலாபாலிடம் இருந்து விவாகரத்து பெற்று கடந்த வருடம் மருத்துவர் ஒருவரை ஏ.எல்.விஜய் திருமணம் செய்து கொண்ட நிலையில், அமலா பால் இந்த வருடம் இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைத்துள்ளார்.