*ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் போஸ்டரை பார்ப்பதையே கேவலமாக நினைத்து கெத்து காட்டினர் பாலிவுட் ஹீரோக்கள். ஆனால் இன்றோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தமிழ்ப் படங்களை நோகாமல் ரீமேக் செய்து தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் தெறி, திருப்பாச்சி இரண்டையும் ஹிந்தியில் ரீமேக்க விரும்புகிறாராம் சல்மான் கான். 
(ஏக் மாரா தோ துக்கடா டா)

*இந்தப் புள்ள அமலாபாலுக்கு என்னதான் தனி தெனாவெட்டுன்னே தெரியலை. ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்தார், அதன் ஹிட் கொடுத்த தைரியத்தில் இப்போது ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதுவும் ஒரு சிக்கலான கதைதானாம். அதில் பெற்றோர் கண் எதிரே சுய இன்பம் செய்யும் இளம்பெண்ணாக நடிக்க இருக்கிறாராம். 
(யம்ம்மா! லா பால்)

*கிட்டத்தட்ட சினிமாவை விட்டு நகர்ந்துவிடலாமா?! எனும் யோசனையிலிருந்த காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறது. கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இருப்பவர், ‘கால் சென்டர்’ எனும் ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். 
(கலக்கு நீ காஜல்)

*ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலின்  அதிபரான கமல்ஹாசன் ’என் நிறுவனம் இனி நிறைய படங்களை தயாரிக்கும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய திறமைசாலிகளுக்கு வாய்ப்பு உண்டு. மருதநாயகம் நிச்சயம் வரும். அதில் எனக்கு பதிலாக இன்னொரு நடிகர் இருப்பார்.’ என்றார்.அவர் சொன்னது போல் அநேகமாக அதில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது. 
ஏற்கனவே கமல் தயாரிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்தார். ஆனால் படம் தான் ஓடவேயில்லை. 

*லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். அநேகமாக வில்லன் விஜய் சேதுபதிக்கு ஆண்ட்ரியா ஜோடியாக இருக்கலாம் என்கிறார்கள். 
(வில்லனின் அழகிய வில்லி)
-