amala paul thirutu payalea movie release date
இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’. இந்தப் படத்தை. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஜீவன் நடித்து 2006ஆம் ஆண்டு வெளிவந்த திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமலாபால் விவாகரத்திற்கு பின் இந்தப் படத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.
