'ஆடை' படத்தின் படப்பிடிப்பின் போது,  நடிகை அமலா பால் மிகவும் பாவமாக நடித்தது, குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். 

இயக்குனர் ரத்னகுமார், மேயாத மான் படத்தை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம்,  'ஆடை'.  நேற்றைய தினம் வெளியாக இருந்த இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக, வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் ரத்னகுமார் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார்.  "ஒரு காட்சியில் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பர்களை உடலில் சுற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என்று அமலா பாலிடம் கூறினோம். உடனே அவர் உடல் முழுவதும் கேப் இல்லாமல் அட்டை பாக்ஸ் போன்று சுற்றிக்கொண்டு மிகவும் பாவமாக நடித்தார் என கூறியுள்ளார்.