அமலா பாலின் புதிய அவதாரம் ....!

தமிழ் திரையுலகில் நடிகர்களே பாடகர் அவதாரம் எடுப்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது .கமல் ,விஜய், தனுஷ், சிம்பு, உள்பட பல நடிகர்களும்,லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன், மடோனா போன்ற நடிகைகளும் பாடல்கள் பாடி உள்ளனர் .

இந்த ஆசை அமலா பாலையும் விட்டு வைக்கவில்லை போலும்...

ஜெயராம், பிரகாஷ் ராஜ் நடித்து வரும் 'அச்சான்யன்ஸ்' என்னும் மலையாள படத்தில் அமலாபால் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் உலா வருகிறது.


விரைவில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக அமலாபால் இரவு பகல் பாராமல் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமலாபால் தற்போது தனுஷுடன் 'வடசென்னை', 'வேலையில்லா பட்டதாரி 2', பாபிசிம்ஹா ஜோடியாக  'திருட்டுப்பயலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.