தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய் இயக்குநர் அவதாரம் எடுத்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.  தல அஜித்தை வைத்து ’கிரீடம்' படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்னர் ஆர்யாவை வைத்து மதாராசபட்டினம், விஜய்யை வைத்து தலைவா, பிரபு தேவாவை வைத்து தேவி என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றார். விக்ரம், பேபி சாராவை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தில் நடிக்கும் போது அமலா பாலுக்கும், ஏ.எல்.விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி கொடுத்த சாக்‌ஷி... புடவையில் ஒட்டுமொத்த அழகையும் காட்டி அட்ராசிட்டி...!

அதன்பின்னர் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது அமலா பால் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வர, இயக்குநர் ஏ.எல்.விஜய் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோரை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார். 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜய் - ஐஸ்வரா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இயக்குநர் விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் முதன் முறையாக மருத்துவமனையில் தனது மகனை கையில் ஏந்திக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பார்க்க அச்சு, அசலாக அப்பாவை போன்றே இருக்கும் குட்டி செல்லத்தின் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்...