நடிகை அமலா பால் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரைப்படம் ஆடை.  இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

டீசரில் உடலில் ஆடை ஏதுமின்றி அமலாபால் நடித்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவரின் கைவசம் இருந்த, விஜய் சேதுபதியின் திரைப்படமும் நழுவியது. இதைத்தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள டீசரில் லிப் லாக் காட்சியில் நடித்து அதிர்ச்சியாக்கியுள்ளார்.

 

இந்த படத்தில், மிகவும் துணிச்சலான பெண், திமிர் பிடித்த பெண், கலைநயம் மிக்க பெண்,  என மூன்று பரிமாணத்தில் தன்னுடைய நடிப்பை, அமலாபால் வெளிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில்  நடிகையுமான விஜே ரம்யாவுடன், லிப் டூ லிப் முத்தம் காட்சி, நிர்வாண காட்சியிலும் நடித்துள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலரை நேற்று பிரபல பாலிவுட்  இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். இவர் நடிகை நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.