நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் 80ஸ் கிட்ஸ் ராணி... எந்த படத்தில நடிக்கப் போறாங்க தெரியுமா? 

தமிழ் பட திரையுலகின் 80களில் ரசிகர்களை ஆட்டிப்படைத்தவர் அமலா. மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை என ஏராளமான வெற்றி படங்களில் அசத்தலாக நடித்தவர். அதுமட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். 1992ம் ஆண்டு தெலுங்கின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார் அமலா. 2104ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மனம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். அதன் பின்னர் அமலாவை திரையில் பார்க்கமல் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

வருத்தத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த மீண்டும் திரையில் தோன்ற உள்ளார் அமலா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு அம்மாவாக அமலா நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் கதாநாயகியான ரீத்து வர்மாவும், நாசர், ரமேஷ் திலக், சதீஷ் உட்பட ஏராளமானோர் நடிக்க உள்ளனர். தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் நேர்த்தியான மிடில் கிளாஸ் அம்மாவாக அமலா நடிக்க உள்ளார்.

குடும்பம் என்ற வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்துள்ள அமலா, தற்போது மீண்டும் திரை வானில் சிறகடிக்க தொடங்கியுள்ளார். 
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள அவர், ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுத்த புது லுக் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள அமலாவை ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரவேற்றுள்ளனர்.