விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா மானசாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர். இந்த சீரியலில் காதலர்களாக நடித்த ஆல்யா மானசா, சஞ்சீவ்விற்கு இடையே நிஜத்திலும் காதல் பற்றிக்கொண்டது. மற்றவர்களை போல் இல்லாமல் இந்த இளம் ஜோடி தங்களது காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 

ஆல்யா மானசா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் தான் ஆல்யா மானசா கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியானது. இந்த தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். 

அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை சஞ்சவ், ஆல்யா தம்பதியினர் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். தற்போது இந்த ஜோடி ஒன்றாக சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடி எந்த போட்டோவை வெளியிட்டாலும் அதை தாறுமாறு வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் கூட ஆல்யா மானசாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், செல்ல மகளை கொஞ்சிய வீடியோ ஆகியவை தாறுமாறு வைரலானது. 

இந்நிலையில் ஆல்யா மானசா தன்னுடைய செம்ம குத்தாட்ட டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 1 நிமிடம் 8 செகண்ட் ஒளிபரப்பாகும் இந்த நடன வீடியோவில், செம்ம கியூட் ரியாக்ஷன் கொடுத்து, ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார் ஆல்யா. மேலும் இவருடைய கணவர் சஞ்சீவ், ஆல்யா ரியாக்ஷனை பீட் பண்ண எந்த பெண்ணாலும் முடியாது என புகழாரம் சூட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on Jul 30, 2020 at 7:55pm PDT