ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘அலா வைகுண்டபுரம்லோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சமாஜவராகமனா..’ என்ற பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு, ராஜேந்திர பிரசாத், சச்சின் கேட்கர், முரளி ஷர்மா, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில், நவ்தீப், சுஷாந்த், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

யு-டியூப்பில் வெளியான இப்படத்தின்  ‘சமாஜவராகமனா..’ பாடல் லிரிக் வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது, படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பாடலை நன்றாக காட்சிப்படுத்த வேண்டும் என்ற உத்துதலையும் படக்குழுவிற்கு கொடுத்துள்ளது. எனவே பிரான்சில் உள்ள காதல் நகரமான பாரீஸில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். தமன் இசையில் உருவாகியுள்ள  இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.  இப்பாடலை சிரிவெண்ணிலா சீதாராம சாஸ்திரி எழுதியுள்ளார். பாரீஸ் நகரில் பாடல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பாரீஸ் நகரின் புகழ்பெற்ற நினைவு சின்னமான ஈபிள் டவர் முன்பு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே எடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுனின் பட அப்டேட்டிற்காக வெயிட் செய்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் இரட்டிப்பு கொண்டாடமாக அமைந்துள்ளது.