"நியூயார்க் நகர மேயரைச் சந்தித்த அல்லு புஷ்பா ஸ்டைலை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இது குறித்தான புகைப்படங்களை நாயகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் மிகவும் அறியப்பட்ட நடிகர்களில் ஒருவராகி விட்டார் அல்லு அர்ஜுன். தெலுங்கு நடிகர் சமீபத்தில் நியூயார்கை விசிட் செய்து உள்ளார். அங்கு அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் ஏற்பாடு செய்த மிகவும் பிரபலமான வருடாந்திர நிகழ்வில் கலந்து கொண்டார். இந்திய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதற்காக அல்லு அர்ஜுன் கலந்து கொண்டிருந்தார்.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு...விவாகரத்துக்கு பின் மகனுக்காக இணைந்த ஐஸ்வர்யா - தனுஷ்! மேட்சிங் - மேட்சிங் உடையில் வைரலாகும் புகைப்படம்!

"நியூயார்க் நகர மேயரைச் சந்தித்த அல்லு புஷ்பா ஸ்டைலை அவருக்கு கற்றுக் கொடுத்தார். இது குறித்தான புகைப்படங்களை நாயகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்துடன், நியூயார்க் நகர மேயாரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது மிகவும் மரியாதைக்கு நன்றி திரு எரிக் ஆடம்ஸ் என குறிப்பிட்டுள்ளார். புஷ்பா நாயகன் கருப்பு நிற உடையில் சட்டை பையில் மூவர்ணத்தை சுமந்தபடி காட்ச்சியளிக்கிறார். புகைப்படத்தில் அல்லு மற்றும் மேயர் பிரபலமான புஷ்பாவின் கைஅசைவுகளை செய்வதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்: கமல்ஹாசன் கேரவனில் இத்தனை வசதிகளா? பிரதமர் மோடி கூட இதை தான் பயன்படுத்தினாராம்..! வைரலாகும் தகவல்..!

View post on Instagram

அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிக்கா மந்தனாவின் புஷ்பா தி ரைஸ் மாபெரும் வெற்றிக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதுப்பிப்பை தயாரிப்பாளர்கள் இறுதியாக வெளியிட்டுள்ளனர். புஷ்பா இரண்டாம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் துவங்கியுள்ளது. புஷ்பா தி ரூல் என்று பெயரிடப்பட்டுள்ள இது தெலுங்கு தயாரிப்பாளர்களில் வேலை நிறுத்தம் காரணமாக முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு.

மேலும் செய்திகள்: சூர்யா, ஜோதிகா, தனுஷ், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி.! வைரலாகும் போட்டோஸ்!

முன்னதாக ஜூலை 29 அன்று அல்லு அர்ஜுன் சுருட்டுப் பிடித்தபடி சால்டன் பேப்பர் லுக்கை வெளியிட்டு இருந்தார். இது புஷ்பா தி ரூலில் அவரது தோற்றமாக இருக்கலாம் என ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் பின்னர் புஷ்பாதி இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு தோற்றங்களில் வருவது உறுதியானது. படம் குறித்தான போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது. மேலும் விஜய் சேதுபதியும் இரண்டாம் பாகத்தில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.