சக்திமான் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

Allu Arjun as Shaktimaan : முகேஷ் கன்னாவின் 'சக்திமான்' நீண்ட காலமாக பேசுபொருளாக உள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார். 'மின்னல் முரளி' புகழ் பேசில் ஜோசப் இயக்குநராக உள்ளார். 1990களின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.

சக்திமான் ஆக நடிக்கும் அல்லு அர்ஜுன்

2022 இல் சோனி பிக்சர்ஸ் 'சக்திமான்' படத்தை அறிவித்தது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிப்பார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா இதை மறுத்தார். ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, 'புஷ்பா 2' படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் தான் சக்திமான் ஆக நடிக்க உள்ளாராம். மலையாளத்தில் 'மின்னல் முரளி' என்கிற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய பேசில் ஜோசப் இப்படத்தை இயக்க உள்ளாராம்.

பேசில் ஜோசப் தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அல்லு அர்ஜுனும் இயக்குனர் அட்லீ இயக்கும் AA22xA6 படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளார். இப்படத்தை 700 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள். இதில் அல்லு அர்ஜுன் மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இயக்குனரை மாற்றிய அல்லு அர்ஜுன்

அட்லீ படத்தை தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிக்க இருந்தார் அல்லு அர்ஜுன். ஆனால் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அப்படத்தில் இருந்து அல்லு விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு பதிலாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளாராம். திரி விக்ரம் படத்திற்கு பதில் தான் பேசில் ஜோசப் இயக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க உள்ளாராம் அல்லு. இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் இரண்டு சர்வதேச நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாம்.