Allu Arjun : அல்லு அர்ஜுனை சந்திக்க காத்திருந்த ரசிகர்கள் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர் . இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாது என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுனை சந்திக்க காத்திருந்த ரசிகர்கள் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடிந்துள்ளனர். இதை தொடர்ந்து இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாது என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'புஷ்பா : தி ரைஸ்' படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பாகம், டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது.

இதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புஷ்பா பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரசிகர்களை அல்லு அர்ஜுன் நேரடியாக சந்திக்கும் பொருட்டு ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணக்கிட்ட ரசிகர்களை விட அதிகமானோர் அங்கு வந்து குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்படுள்ளது. இதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தகவல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து கொண்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிகழ்ச்சியை ரத்து செய்யக்கூறி விடு திரும்பிய அல்லு அர்ஜுன் ; ரசிகர்கள் காயமடைந்த குறித்த தகவல் தனக்கும் வருத்தமளிப்பதாகவும். அவர்கள் குறித்த தகவலை அவ்வப்போது குழுவினரிடம் கேட்டறிந்து வருவதாகவும், இது போன்ற நிகழ்வு இனி நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.
