all the news are false about me said oviya
யார் சொன்னது அப்படி...பொய்..பொய் எல்லாம் பொய்...! ஓவியா கடுப்பு..!
நடிகை ஓவியா தற்போது ஒரே நேரத்தில மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஓவியாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில்,புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்களிடம் அதிக பணம் கேட்பதாக சில செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல், களவாணி - 2 படத்தில் நடித்து வரும் ஓவியா,அதிக சம்பளம் கேட்டதால்,அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இதற்கு பதில் அளித்த நடிகை ஓவியா, இதெல்லாம் பொய் தகவல்.. களவாணி படத்தில் நான் தான் நடித்து வருகிறேன்...இது போன்ற பொய் தகவல்கள் எதற்காக இப்படி பரப்புகிறார்கள் என வேதனை கொண்டுள்ளார் ஓவியா...
மேலும் தான் எப்போதுமே நல்ல கதைகளுக்கு முக்கியத்தும் கொடுப்பேன்...தயாரிப்பாளர்களிடம்,இவ்வளவு பணம் கொடுத்ததால் தான் நான் நடிப்பேன் என எப்போதும் கேட்டது கிடையாது என தெரிவித்து உள்ளார்
தற்போது ஓவியா, களவானி- 2, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.
