தொலைக்காட்சிகளின் லைவ் கவரேஜ் இல்லாததால் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் மரணத்துக்கு அவர் தயாரிப்பில் நடித்த அஜீத், விஷால் உட்பட ஒரு நடிகர் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்  பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டி  கடந்த வாரம் வெள்ளியன்று  மதியம் 1  மணியளவில்  இயற்கை  எய்தினார் . அவருக்கு  வயது 75. அவரது மனைவி பெயர்  B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. 

அவர்  ’தாமிரபரணி’ , ’படிக்காதவன்’, ’வேங்கை’ , ’வீரம்’ , ’பைரவா’ ஆகிய 5   படங்களை  தயாரித்துள்ளார் .  விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து சில தினங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட இவரது 6வது படமான ’சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அவரது உடல் நெசப்பாக்கத்தில்மறுநாள் சனியன்று  தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒரு சில துணை நடிகர்கள் தவிர யாருமே கலந்துகொள்ளவில்லை என்றும் இத்தனைக்கும் சில ஹீரோக்கள் சென்னையில்தான் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது. தயாரிப்பாளரின் பக்கத்துத் தெருவில் அலுவலகம் வைத்திருக்கும் விஷால் கூட செல்லவில்லை என்ற அதிர்ச்சி செய்தி ஒரு புறமிருக்க சென்னையிலேயே சும்மா வெட்டியாக இருந்த ‘வீரம்’ அஜீத் கூட தனது ஆபிஸ் பாய் ஒருவரை அனுப்பிதான் அஞ்சலி செலுத்தினாராம்.வெங்கட்ராமி ரெட்டியின் இறுதிச் சடங்கை ஏதாவது ஒரு பிரபல சானல் லைவ் கவரேஜ் பண்ணியிருந்தால் அனைத்து நட்சத்திரங்களும் ஆஜராகியிருப்பார்கள் என்று முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.