All films will now be certified by A - Auditing Committee Action ...
இனிமேல் சாராயக் குடிக்கும் காட்சியுள்ள அனைத்துப் படங்களுக்கும் “ஏ” சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியுள்ளார்.
மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியது:
“திரைப்படங்களில் சாராயம் குடிக்கும் காட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் சமூகத்தில் குடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. டாஸ்மாக் விற்பனை உயர்ந்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், இனிமேல் சாராயம் குடிக்கும் காட்சி உள்ள அனைத்து படங்களுக்கும் ஏ சான்றிதழ் வழங்கப்படும். சும்மா பேருக்கு “மது அருந்துவது, புகைபிடிப்பது தவறு” என்று ஒரு மூலையில் போட்டால் மட்டும் போதாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
