- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?
Top 5 Best Contestants in The Bigg Boss Tamil Season 9 : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 9ஆவது சீசனில் சிறந்த 5 போட்டியாளர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 9. இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி எந்தவித விமர்சனமும் இல்லாமல் திறம்பட தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால், போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி உள்பட மொத்தமாக 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இடம் பெற்றிந்தார்கள். தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 77 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் ஒரு மாசத்தில் இந்த நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், இதுவரையில் திறமையாக விளையாடிய சிறந்த 5 போட்டியாளர்கள் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Bigg Boss Tamil Season 9 Contestant
ஒவ்வொரு நாளுமே யார் வெளியேற்றுவார்? யார் வீட்டுக்குள் இருப்பார் என்று அறியாத சூழ்நிலையில் இருக்கிறது. ஏனென்றால் ஓட் ரசிகர்கள் மத்தியில் சரியாக வெளிவராத காரணத்தினாலும் மக்களால் மட்டுமே இவர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? இல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்கள் முடிவெடுத்து வெளியேற்ற படுகிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாகவே இருந்து வருகிறது. இதுவரைக்கும் இவர் தான் இந்த வீட்டின் worst கண்டஸ்டண்ட் இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவார் என்றும் யாருக்கும் தெரியாது. இது ஒரு சீக்ரெட் ஆகவே மெயின்டைன் பண்ணி வருகிறார் பிக் பாஸ்.
1. பார்வதி:
இவர் VJ பார்வதி என்று என்றுதான் நமக்கு எல்லாருக்கும் தெரியும் இவர் சிறு சிறு குறும்படங்கள் மூலம் அடுத்து இருக்கிறார். இவர் ஒரு மதுரையை சேர்ந்த பெண் என்றும் கூறப்படுகிறது இவர் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு tough கண்டஸ்ட்டென்ஸ் ஆகவே இருந்து வருகிறார். இவரது அடாவடி பேச்சும், சுயநலமும் பிறரை மதிக்காத குணமும் கொண்டவர் என்று ரசிகர் மத்தியில் இவரை கூறப்படுகிறது இவர் முதலாவதாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகிறார்கள். ஏனென்றால் இவர் மட்டும்தான் அந்த பிக் பாஸ் வீட்டுக்குள் அடாவடியாக பேசி வருகிறார். ஒரு டாஸ்கி ஒழுங்காக செய்யாமல் தனது பேச்சின் முழுமை இவர் வின் பண்ணி வருகிறார் அதனால் பிக் பாஸும் இவரை வெளியேற்றாமல் வீட்டுக்குள் இருக்க வைப்பது ரசிகர் மத்தியில் பெரும் கோபத்தையும் உண்டாக்கி இருக்கும் நிலையில் இவர்தான் முதலாவதாக வருவதற்கு வாய்ப்பு இருக்கு என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவர் இல்லை என்றால் இந்த பிக் பாஸ் ஷோவே இல்லை என்றும் பலர்கள் மத்தியில் வாய்மொழி வார்த்தையாக கூறப்படுகிறது. பிக் பாஸுக்கே ஒரு contentகா இவர் இருந்து வருகிறார் என்றும் நெட்டிசன்களின் மத்தியில் கூறப்படுகிறது.
கம்ருதீன்:
இவர் ஒரு சீரியல் நடிகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் இவர் நடித்து வந்தார் அதன் பிறகு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததன் பேரில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனது விளையாட்டை மிக நன்றாகவே விளையாண்டு வந்திருக்கிறார் ஆனால் இவரும் பார்வதியும் சேர்ந்து செய்யும் செயல்கள் அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கிறது என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இவர் ஒரு அழகான ஆண் மகன் என்னும் பழத்தின் மூலம் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார் பெண்களின் மத்தியில் இவருக்கு அதிகமான fan இருப்பதாக கூறப்படுகிறது. சீசன் 1ல் ஆர்வ் பெண்களின் மத்தியில் அதிக அளவு எண்ணிக்கை பெற்று இவரே வெற்றியை பெற்றார். அதேபோல் கம்ருதீனும் வெற்றி பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் பார்வதியுடன் இணைந்து பழகுவதையும், கல்யாணம் செஞ்சுக்கிறேன் என்று சத்தியம் செஞ்சதையும் உங்க அம்மாகிட்ட பேசுற என்பதையும் ரசிகர் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் வருகிறது. வெற்றி பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது
வினோத்:
கானா வினோத் , இவர் வடசென்னை முழுவதும் இவர் கானா பாடல்களை பாடி வந்தவர். பிக் பாஸ்க்கு இவர் கானா பாடல்களை எழுதி கொடுத்தார். பிக் பாஸில் அனைத்து டாஸ்களையும் இவர் மும்முறமாக செய்வார். ஆனால் இவருக்கு கோபம் அதிகளவில் இருப்பதால் விஜய் சேதுபதி இடம் கூட இவர் பல திட்டுகளை இவர் வாங்கியுள்ளார் கானா வினோத் ஒரு டப் கண்டஸ்டண்ட்ஸ் ஆகவே இந்த வீட்டில் இருந்து வருகிறார் கண்டிப்பாக இவர் டைட்டில் வின் பண்ணுவார் என்று ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
4. சுபிக்க்ஷா:
சுபிக்க்ஷா ஒரு மீனவ சமுதாயத்தில் இருந்து வந்தவர். இவரது அமைதியான குணமும் உண்மையான குணமும் இவருக்கு பல ரசிகர்கள் மத்தியில் பல பேன் பாலோயிஸ் உள்ளனர். மீனவ சமுதாயத்தில் இருந்து வரப்பட்ட முதல் பெண் இவர்தான் என்பதை குறிப்பிடத்தக்கதே. இவர் அடிக்கடி மீனவ சமுதாயத்தில் இருந்து நான் வரப்பட்டுள்ளேன் என்பதை இந்த பிக் பாஸ் வீட்டில் நிருபித்துக் கொண்டே இருக்கிறார் பாட்டின் மூலமா அல்லது பேச்சின் மூலமாக அது நிரூபித்துக் கொண்டே இருப்பார். அதனை இந்த வீட்டில் கிண்டல் செய்து கொண்டே வருகிறார்கள். ஒரு பெண் தனியாக இருந்து தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருபவர் இவர் ஒருவர் மட்டுமே. இவர் சரியான பேச்சும் சரியான விளையாட்டும் அவரது தனி சிறப்பு என்று கூறப்படுகிறது இவர் கண்டிப்பாக டைட்டிலை வின் செய்வார் என்றும் ரசிகர்களால் கூறப்படுகிறது.
5. திவ்யா கணேஷ்:
ஒயில் காட் கண்டஸ்டன்ஸாக இந்த வீட்டிற்குள் வந்தவர் திவ்யா கணேஷ் 20 நாட்கள் கழித்து இவர் இந்த வீட்டுக்குள் வந்தார் ஒவ்வொருவரையும் பற்றியும் இவருக்கு ஒரு கருத்தைக் கொண்டும் வீட்டுக்குள் நுழைய அந்த சூழல் அப்படியே மாறிவிட்டது என்றே கூறலாம். இவர் ஆரம்ப கட்டத்தில் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்போது அவர் ஆட்டத்தை இவர் சிறப்பாக விளையாண்டு வருகிறார். இவரது உண்மையான பேச்சும் சரியான வாக்குவாதமே இவருக்கு வெற்றியை பெற்று தரும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். இவரது உண்மை குணமே இவருக்கு பல வழிகளைப் பெற்று தந்தாலும் அதுவே வெற்றியை பெற்று தரும் என்று ரசிகர்கள் இவரை வர்ணித்து எழுதி வருகிறார்கள். தனியாக விளையாட்டு வருவார் திவ்யா கணேஷ் இவருக்கு பலர் வாய்ப்பு அளிக்காத நிலையில் அவரே தனது வாய்ப்பை தேடி உருவாக்கிக் கொள்வார். தற்போது இவரும் டாப் 5 இல் ஒருவராக இடம் பிடித்துள்ளார் என்பது கூறப்படுகிறது சீசன் 7ல் அர்ச்சனாவும் ஒரு ஒயில் கண்டஸ்டாகவே இந்த வீட்டிற்குள் வந்தார் ஆனால் அவரையே அந்த வெற்றியை பெற்று சென்றார் அதேபோலவே திவ்யாவும் தற்போது வெற்றியை பெற்று செல்வார் என்பது ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது. ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்து வெற்றிய பெறலாம் என்பதற்கு உதாரணமே திவ்யாவாக தற்போது இருந்து வருகிறார் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
யார் அந்த டைட்வில் வின்னர்?
இவர்கள் சிறந்த போட்டியாளர்களாக கருதப்படும் நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ன் டைட்டில் வின்னராக விஜே பார்வதி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியில்லை என்றால் சுபிக்ஷா, கனி, சபரி ஆகியோருக்கும் டைட்டில் வின்னராவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. யார் அந்த டைட்வில் வின்னர் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்