all film shooting is cancelled tomorrow
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழு, வரும் அக்டோபர் 8-ஆம் தேதி ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் மூத்த நடிகர்கள் மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி நடிகர் நடிகைகளுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், அன்றைய தினம் சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
