2017ன் மலையாள சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘அங்கமாலி டயரிஸ்’ பட ஹீரோ ஆண்டனி வர்கீஸின் தந்தை இன்னும் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்னும் செய்தி கேரளாவில் பரபரப்பாகியுள்ளது. அச்செய்தியை அவரது மகனே முகநூலில் பகிர்ந்துள்ளார்.

நேற்று முன் தினம் தொழிலாளர் தினத்தை ஒட்டி தனது வழக்கமான சவாரியை முடித்துவிட்டு வந்த தனது தந்தையை அவரது ஆட்டோவுக்கு முன் நிறுத்தி புகைப்படம் எடுத்த ஆண்டனி வர்கீஸ், .. உழைப்பாளிகள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். இவர் எனது தந்தை. தனது அன்றாட சவாரியை முடித்து விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்திருக்கிறார். இவரை வற்புறுத்தி ஆட்டோவுக்கு முன் நிறுத்தி இப்படத்தை எடுத்தேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

சுமார் 60,000 லைக்குகளை அள்ளிய அப்பதிவில் ஆண்டனிக்கு, உங்க அப்பாதான் ரியல் ஹீரோ.. நீங்க அவரை நினைத்து பெருமைப்படலாம்’ என்று  பாராட்டுக்கள் குவிந்தன. ஒரு சிலர் மட்டும் ‘நீங்கதான் ஹீரோ ஆயிட்டீங்கள்ல வீட்டுல அவரை ஓய்வெடுக்கச் சொல்லி நீங்க சம்பாதிச்சிக் கொடுக்கவேண்டாமா? என்று கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள்.