குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது 13 வயது மகள் வீடியோ கேம் விளையாடும்போது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான நிஜ வாழ்க்கை சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
மும்பையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு மாதம் 2025 தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமர் கலந்து கொண்டு பேசினார். அதில், சில மாதங்களுக்கு முன்பு, தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் தன்னை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டதாக நடிகர் நினைவு கூர்ந்தார்.
இச்சம்பவம் குறித்து அக்ஷய் குமார் மேலும் கூறியிருப்பதாவது: "சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை உங்கள் அனைவரிடமும் சொல்ல விரும்புகிறேன். என் மகள் ஒரு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தாள், சில வீடியோ கேம்களை நீங்கள் யாருடனாவது விளையாடலாம். நீங்கள் முன்பின் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்," என்று அக்ஷய் கூறினார்.
காந்தாரா புயலிலும் அசராம அடிக்கும் பவன் கல்யாணின் ஓஜி; கலெக்ஷன் இத்தன கோடியா?
"நீங்கள் விளையாடும்போது, சில நேரங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... பிறகு ஒரு செய்தி வந்தது, நீங்கள் ஆணா அல்லது பெண்ணா? அதற்கு அவள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் அவர் ஒரு செய்தியை அனுப்பினார். உங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? அது என் மகள். அவள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சொன்னாள். இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் கிரைமின் ஒரு பகுதி...
நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் சைபர் பீரியட் என்ற ஒரு வகுப்பு இருக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். அதில் குழந்தைகளுக்கு இதுபற்றி விளக்கப்பட வேண்டும். தெருக்களில் நடக்கும் குற்றங்களை விட இந்தக் குற்றம் பெரியதாகி வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்...," என்று அக்ஷய் குமார் வெளிப்படுத்தினார். வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் மாணவர்கள் (7-10 ஆம் வகுப்பு) பாதுகாப்பாகவும், தகவலறிந்தவர்களாகவும் இருக்க, சைபர் கல்வியை வாராந்திர பாடமாக சேர்க்க வேண்டும் என்று அக்ஷய் குமார் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மூதேவி.. கையில விலங்கு போட்டு கூட்டி வரணும்ங்க அவனை..! விஜயை ஒருமையில் பேசும் நக்கீரன் கோபால்!
