ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’. 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பார். அதேபோல் ராகவா லாரன்ஸும் திருநங்கை வேடத்தில் தோன்று கிளைமேக்ஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார். இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழி மாற்று செய்யப்பட்டது. இந்தியில் டப் செய்யப்பட்ட இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார். தொடக்கத்தில் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தை விட்டு வெளியேறிய லாரன்ஸ், பின்னர் சமாதானமடைந்து இயக்கத் துவங்கினார்.

தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த  'திருநங்கை' கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடித்துள்ளார். தியேட்டர்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டு இருப்பதால் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன.  அந்த வரிசையில் லக்ஷ்மி பாம் படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் இணையதளத்தில் தீபாவளி விருந்தாக நவம்பர் 9ம் தேதியே வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!

இந்தியாவில் மட்டுமே இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் அங்கு எல்லாம் லக்ஷ்மி பாம் திரைப்படம் தியேட்டரில் மட்டுமே வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார் திருநங்கையாக நடித்துள்ள இந்த படத்தை தியேட்டரில் கை தட்டி, விசிலடித்து பார்த்து ரசிக்க எண்ணிய இந்திய ரசிகர்கள் இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.