Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் வாக்களிக்காத சர்ச்சை...அக்‌ஷய் குமாரின் குட்டு வெளிப்பட்டது...

’வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வுப் படங்களில் மட்டும் நடித்தால் போதுமா, தேர்தலில் ஒழுங்காக வாக்களிக்க வேண்டாமா? என்று கடந்த ஓரிரு தினங்களாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தனது தரப்பு விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் மிகக் கோபமாக வெளிப்படுத்தியுள்ளார்.

akshay kumar denies allegatons against him
Author
Mumbai, First Published May 4, 2019, 2:30 PM IST

’வாக்குப் பதிவு குறித்த விழிப்புணர்வுப் படங்களில் மட்டும் நடித்தால் போதுமா, தேர்தலில் ஒழுங்காக வாக்களிக்க வேண்டாமா? என்று கடந்த ஓரிரு தினங்களாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் தனது தரப்பு விளக்கத்தை ட்விட்டர் பக்கத்தில் மிகக் கோபமாக வெளிப்படுத்தியுள்ளார்.akshay kumar denies allegatons against him

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த திங்கள் அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் இந்தி நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அப்போது நடிகர் அக்‌‌ஷய் குமாரின் மனைவி வாக்களிக்க வந்தார். ஆனால் அக்‌‌ஷய் குமார் வரவில்லை. இது சர்ச்சை ஆனது.‘வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த அக்‌‌ஷய் இவ்வாறு செய்வதா?’ என்று கேள்விகள் எழுந்தன. மேலும் அக்‌‌ஷய் குமாரிடம் கனடா நாட்டு குடியுரிமை இருப்பதை இந்த சம்பவத்தோடு முடிச்சு போட்டு செய்திகள் பரவின.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ...’என் குடியுரிமை குறித்து தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் ஏன் பரப்பப்படுகின்றன என்று எனக்கு புரியவில்லை. நான் கனடா குடியுரிமை வைத்திருப்பது குறித்து ஒருபோதும் மறைத்ததில்லை. யாரிடமும் மறுத்ததும் இல்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ, நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்குச் செல்லவில்லை என்பதும் அதே அளவுக்கு உண்மைதான். நான் இந்தியாவில் வேலை செய்கிறேன். அனைத்து வரிகளையும் இந்தியாவிலேயே செலுத்துகிறேன்.akshay kumar denies allegatons against him

இத்தனை ஆண்டுகளில் நான் தேசத்தின் மீதான காதலை யாரிடமும் நிரூபிக்கவேண்டிய தேவை இருந்ததில்லை. என் குடியுரிமை குறித்து தொடர்ந்து தேவையில்லாத சர்ச்சைகளை நான் விரும்பவில்லை. தனிப்பட்ட, சட்டபூர்வமான, அரசியலற்ற என் குடியுரிமை யாருக்கும் எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.கடைசியாக, இந்தியாவை வலிமையாக்க சிறிய அளவிலான எனது பங்களிப்பைத் தொடர்ந்து செலுத்துவேன்’என்று பதிவிட்டுள்ளார் அவர்.

இன்னொரு பக்கம் இந்தியக் குடியுரிமை இல்லாத ஒரு நடிகரை தன்னைப் பேட்டி எடுக்க மோடி தேர்ந்தெடுத்தது ஏன்? இதுதான் மோடியின் நாட்டுப்பற்றா?? என்ற கேள்வியும் கிளம்பி வந்துகொண்டிருக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios