சீனாவின் வூகான் நகரில் ஆரம்பித்த கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. நோய் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளுதல், வருவாய் இழப்பு, பொருளாதார வீழ்ச்சி, விலை ஏற்றம் என மக்கள் பல பிரச்சனைகளோடு போராடி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வைரஸின் கோர தாண்டவம் உச்சத்தை எட்டி வருகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை 1,587,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 10 லட்சத்து 22 ஆயிரத்து 565 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். நாட்டில் தீயாய் பரவும் இந்த கொரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை, அரசியல் கட்சியினர், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நடிகையும், உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளுமான அக்சராஹாசனை அப்படி ஒரு கொரோனா மரணம் உடைந்து போக வைத்துள்ளது. அக்சராவின் மேக்கப் கலைஞரான சச்சின் டாடா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்சரா.   

சச்சின் டாடா எனக்கு ஷமிதாப் படத்தில் இருந்து மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறார். அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதர், திறமையானவர், எனக்கு சிறந்த நண்பர். அவரின் இரண்டு மகன்களுக்கும் சிறந்த அப்பாவாகவும், மனைவிக்கு சிறந்த கணவராகவும் இருந்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும் என வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.