' 7 ஆம் அறிவு படத்தின் மூலம், கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். மிக குறுகிய நாட்களிலேயே அஜித், விஜய் போன்ற முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டர்.

மேலும் இந்தி, தெலுங்கு, போன்ற மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஆனால் இவருடைய தங்கை அக்ஷராஹாசன் பாலிவுட்டில் ஷமிதாப் என்கிற படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் 95 % திரைஞரங்கங்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் விவேகம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் அவருக்கு கிடைக்காத ரசிகர்களின் வரவேற்பும், அங்கீகாரமும் அக்ஷராவிற்கு கிடைத்துள்ளது. நேற்றைய தினம் அஜித் ரசிகர்கள் மட்டுமே அதிகமாக கட் அவுட் வைத்த நிலையில், புதுவையில் கமல் ரசிகர்கள் பலர் அக்ஷராவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கும் விதத்தில் கட் அவுட் வைத்து அசத்தி இருந்தனர்.