akshaikumar meet modi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் இவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது , இந்நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து நடிகர் அக்சயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் என்னுடைய அடுத்தபடமான 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' படம் குறித்து 15 நிமிடம் கூறியதாகவும்.

இந்த படத்தின் டைட்டிலை கேட்டுவிட்டு பிரதமர் புன்னகை செய்ததாகவும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக பிரதமர் மோடியும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அக்சயகுமார் நடித்து வரும் 'டாய்லெட்: ஏக் பிரேம் கதா' என்ற திரைப்படம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டம் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.