பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2 .0 ' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். தற்போது இயக்குனர், ராகவா லாரன்ஸ் பாலிவுட்டில் இயக்கி வரும் 'காஞ்சனா' படத்தின் ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில், தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த,  'திருநங்கை' கதாப்பாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ஒன்று முக்கிய கேரக்டராக வரும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் அக்சய்குமார், திருநங்கைகள் இல்லம் ஒன்றை கட்டுவதற்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார். இந்த இல்லம் தான் திருநங்கைகளுக்காக இந்தியாவில் கட்டப்படும் முதல் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகளின் வளர்ச்சிக்காக இந்த இல்லத்தை ராகவா லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் கட்டும் பணியை சமீபத்தில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இல்லம் குறித்து ‘லட்சுமி பாம்’ படத்தின் படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸ், அக்சய்குமாரிடம் தெரிவித்ததாகவும், இதனை கேட்டதும் அவர் யோசிக்காமல் ரூ.1.5 கோடி நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் ராகவா லாரன்ஸ்  தெரிவித்துள்ளார்.