சென்னையில் ஒருநாள் – 2’ படத்தின் இயக்குநரான ஜான் பால் ராஜ் இயக்கும் படம் ‘அக்னி தேவ்’. பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதில், பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரில் பெண் அரசியல்வாதி சகுந்தலா தேவியாக மதுபாலா பேசியிருக்கும் வசனங்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. அதுவும் கட்சியினரை பார்த்து மதுபாலா பேசும் சில வசனங்கள் தமிழக அரசியலில் புழக்கத்தில் இருந்தவையாக தெரிகிறது.

என் வீல்சேர் டயர நக்கிக்கிட்டு கிடக்கிறதா இருந்தா கெட, குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்டா நம்பிடுவோமா, பொம்பள ரூபத்துல எமன பார்த்திருக்கியா” போன்ற வசனங்களை குறிப்பிட்டு சொல்லலாம். ‘அக்னி தேவ்’ படம் கிட்டத்தட்ட சசிகலாவை சித்தரிக்கிறதா? என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர்.