ட்விட்டரில் கட்டி உருளுவது என்பது விஜய் - அஜித் ரசிகர்களுக்கு பழக்கமான ஒன்று தான். எப்போதும் தேவையில்லாத விஷயங்களை வைத்து தல - தளபதி ரசிகர்கள் மோசமாக ட்ரோல் செய்வது பல சமயங்களில் திரைப்பிரபலங்களை கூட கடுப்பேற்றி இருக்கிறது. என்ன தான் தல பிறந்த நாளுக்கு, விஜய் ரசிகர்களும், தளபதி பிறந்தநாளில் அஜித் ரசிகர்களும் மாறி, மாறி வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டாலும், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே புது ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி யுத்தத்தை தொடங்கிவிடுவார்கள். 

 

 

இதையும் படிங்க: திருமணமான மூன்றே மாதத்தில் வனிதாவின் 3வது கணவருக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை?

ஆனால் இந்த முறை தல - தளபதி ரசிகர்கள் ஒன்றாக இணைந்து செய்த மாஸான காரியம் ஒட்டுமொத்த திரையுலகையும் உற்றுநோக்க வைத்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் ஒருவர் அவருடைய உறவினரின் மருத்துவ செலவிற்காக உதவி கோரியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்துள்ளனர். அதே சமயத்தில் அஜித் ரசிகர்களும் தங்களது பங்காக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியுள்ளனர். 

 

 

இதையும் படிங்க: நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... உண்மையை ஓபனாக போட்டுடைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்...!

அஜித் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த இந்த எதிர்பாராத உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தளபதி ரசிகர் அதை ட்விட்டரில் பகிர, அவ்வளவு தான் அந்த விஷயம் டாப் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது. இதை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்ட #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹேஷ்டேக் தமிழகத்தில் டாப் ட்ரெண்டிங்கை பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் தல, தளபதி இருவரும் ஒன்றாக இருப்பதை போன்ற புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.