நேற்று இரவு வரை முதலிடத்தில் இருந்த ‘விஸ்வாசம்’ படத்தினை 5 வது இடத்துக்குக் கீழே இறக்கி அழிச்சாட்டியம் பண்ணியுள்ளது முன்னணி இணையதளம் ஒன்று. இதனால் அஜீத்தும் அவரது டீமும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

ஐ.எம்.டி.பி. எனப்படும் இந்தியன் மூவி டேட்டா பேஸ் இணையதளம் இந்திய சினிமாக்கள் குறித்த புள்ளி விபரங்களைத் தொடர்ந்து தொகுத்து வழங்கிவருகிறது. இதன் புள்ளி விபரப்படி நேற்று இரவு வரை பாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் தகர்த்து முதலிடத்தில் நின்றது. இதனால் ரஜினி மற்றும் பேட்ட தயாரிப்பு தரப்பு பயங்கர அப்செட்டில் இருந்தனர்.

ஆனால், தற்போது ஒரே இரவில் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தற்போது IMDB இணையதள பக்கத்தில் பேட்ட படம் 82.5% ஓட்டுகளுடன் பக்கத்தில் விஸ்வாசம் படம் 2.7% ஓட்டுகளுடன்ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. விஸ்வாசம் படத்திற்க்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் எப்படி ஒரே இரவில் மூன்றாவது இடத்திற்கு சென்றது? இதில் ஏதோ பித்தலாட்டம் நடந்துள்ளது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அதன் லிஸ்ட்படி பேட்ட படத்தை அடுத்து ‘கல்லி பாய்’,விதய வினய ராம்[தெ] சிம்பா[இ] ஆகிய படங்கள் 2,3,4, வது இடங்களில் இருக்கின்றன.