தமிழ் திரயுலகில் மிகப்பெரிய நட்சத்திரமான அல்டிமேட் ஸ்டார் அஜீத்க்கு குட்டி குழந்தைகள் , இளைஞர் பட்டாளம் என எண்ணிலடங்கா ரசிகர்கள் உண்டு. அப்படி பட்ட நடிகர் ஒரு சின்ன குழந்தையை பாராட்டி இருக்கிறார் என்றால் அது அவரின் மேன்மையை தான் காட்டுகிறது. 

அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் திரைப்படத்தில் நடைத்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்திருக்கிறார். காமெடியி ரோபோ சங்கர் கலக்கவிருக்கிறார். ஏற்கனவே ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாகிய குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் ரோபோ சங்கர் நடுவராக இருந்துவந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதிலும் அவர் தான் நடுவர். இந்த நிகழ்ச்சியில் ஒரு குழந்தை வீரம் அஜீத் கெட்டப்பில் வந்து பார்வையாளர்களையும், நடுவர்களையும் அசத்தி இருந்தது. அல்டிமேட் ஸ்டாரை அப்படியே கண்முன் கொண்டுவந்த அந்த குழந்தையின் நடிப்பை அஜீத்தும் பார்த்திருக்கிறார்.
 பார்த்ததோடு மட்டுமல்லாமல் ரோபோ சங்கரிடம் அந்த குழந்தை யார் என்னை மாதிரியே நன்றாக நடித்திருக்கிறார் என மனமாற பாரட்டி இருக்கிறார். ரோபோ சங்கரும் இதனை அந்த குழந்தையிடம் கூற செம குஷியாகி இருக்கிறார் அந்த குட்டி வீரம் அஜீத்.