‘விஸ்வாஸம்’ படத்துக்கு அடுத்தபடியாக அஜீத் நடிக்கவிருக்கும் படம் பற்றிய செய்திகள் ‘பிங்க்’ மற்றும் பல வண்ணங்களில் கடந்த இரு தினங்களாக கொடிகட்டிப் பறந்துவருகின்றன. நேற்று, அச்செய்திகளுக்கு இயக்குநர் விநோத் சிறு விளக்கம் அளித்த நிலையில், அவர் மீது கோபம் கொண்ட அஜீத், ‘என் பர்மிஷன் இல்லாமல் அடுத்த படம் குறித்து ஒரு வார்த்தை பேசக்கூடாது’ என்று எச்சரித்துள்ளார்.

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படும் படத்தை இந்த நிமிடம் வரை இயக்கப்போவதாய் இருப்பவர் ‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் விநோத். சரி விஸ்வாஸம் படம்தான் முடிந்துவிட்டதே அடுத்த படம் குறித்த செய்திகளை எழுதுவோமே என்று அனைவரும் ‘பிங்க்’ ரீமேக்கில் அஜீத் நடிக்கவிருக்கிறார் என்று எழுதவே தவறான தகவல்கள் பரவ வேண்டாமே என்று ‘இட்ஸ் நாட் பிங்க் ரீமேக்’என்ற குறுஞ்செய்தியுடன் ட்விட்டர் வாயிலாக வெளிவந்தார் விநோத்.

விநோத்தின் இந்த விளக்கச்செய்தி வெளியானவுடன் என்ன காரணத்தாலோ அவர் மீது கோபமடைந்த அஜீத்,’என் பர்மிஷன் இல்லாமல் விநோத் அடுத்த படத்தைப் பற்றி எதுவும் பேசக்கூடாது’ என்று உதவியாளர்கள் மூலம் எச்சரித்திருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத விநோத் எச்.ராஜா பாணியைப் பின்பற்றி ‘இட்ஸ் நாட் எ பிங்க் ரீமேக்’ என்று செய்தி போட்ட விநோத் நான் அல்ல. வேறு யாரோ என் பெயரில் ஒளிந்திருக்கிறார்கள் என ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைலில் கதைவிடுகிறார்.