Ajith vivegam Still viral on social media
தல அஜித் நடித்துவரும் விவேகம் படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் இன்று அதிகாலை வெளியாகி வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜீத் நடித்து வரும் படம் விவேகம் படத்தில் இன்டர்போல் ஆபிஸராக நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது.
ஐரோப்பாவில் தற்போது பனிமூட்டம் காணப்படுவதால் கடும்குளிரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நாளை மே 1 தல அஜீத் பிறந்தநாள் என்பதால் தளபாடத்தின் டீசர் அல்லது போஸ்டர் வெளியாகுமா என ஏங்கி சமூகவலைதளங்களில் தவம் கிடக்கின்றனர் .
இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. போஸ்டரில் அஜீத் செம மாஸாக சிக்ஸ் பேக் உடம்புடன் முரட்டு தோற்றத்தில் கிழிந்த சட்டையில், காயங்களுடன் அஜீத் பெரிய மரக்கட்டையை தனது தொழில் சுமந்து கொண்டு வெறித்தனமாக கத்தும் புகைப்படம் வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் இந்த போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஏற்கனவே அஜீத்துக்கு தொப்பை என கலாய்த்தவர்கள் எல்லாம் விழி பிதுங்கி இப்புகைப்படத்தை பார்த்து மிரண்டு போயிருப்பார்கள்.
