ajith villan small request for ajith fans
அஜித், ரசிகர்கள் தல மீது எவ்வளவு அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்று அவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது தான் தெரிந்து கொள்ள முடியும். காரணம் பாலபிஷேகம், பட்டாசு, டான்ஸ், என சும்மா பட்டையை கிளப்புவார்கள்.
தற்போது விவேகம் படத்தின் ஓபன்னிங்கில் , மாஸ் காட்டுவதற்கு கார்த்திருக்கின்றனர். அஜித் ரசிகர்கள் அவர் மீது பாசம் காட்டுவது போலவே, அவருடன் சமமாக வில்லன் கதாபாத்தில் கெத்து காட்டுபவர்களையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.
அப்படிதான் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த அருண் விஜயை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அதே போல் தற்போது 'விவேகம்' படத்தில் அஜித்குக்கு வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய் மீதும் அன்பு செலுத்தி வருகின்றனர்.
தற்போது விவேக் ஓப்ராய் அஜித் ரசிகர்களுக்காக ஒரு புகை படத்தை ஷேர் செய்துள்ளார், மேலும் இந்த இடத்தில் தான் தற்போது நடித்து வருகிரோம் இங்கு குளிர் அதிகமாக உள்ளது. ஆகவே அஜித் ரசிகர்களே உங்களுடைய அன்பையும், சூரிய ஒளியையும் கொஞ்சம் இங்கு அனுப்பிவையுங்கள் என கூறியுள்ளார்.
