முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று இவரின் உடலுக்கு எண்ணற்ற பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் நடிகர் அஜித் அவருடைய 57வது படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் அவரால் நேரில் வரமுடியாத சூழ்நிலையால் இரங்கல் மட்டும் கடிதத்தால் தெரிவித்திருந்தார்.

இதனால் இன்று சென்னை வந்து இறங்கியதும் முதல் வேலையாக, இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு சென்றார்.