'இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு போனி கபூர் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருப்பதால், அஜீத் நடிப்பதாக இருக்கும் புதுப்புதுப் படங்கள் குறித்து வெளிவரும் எந்தச் செய்திகளையும் நம்பவேண்டாம். அவை அத்தனையும் கற்பனை நிரம்பிய கட்டுக்கதைகளே’ என்கிறார் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 5வது முறையாக சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிரும்புவதாக செய்திகள் கிளம்பின. அந்தச் செய்திகளுக்கு சிறகு முளைக்கும் விதமாக சிவாவும் அஜீத்துக்காக ஒரு சரித்திரக் கதை தயார் செய்து வைத்திருப்பதாகவும், அஜீத்துடன் இன்னொரு படம் இணைய வாய்ப்பு வந்தால் அது தனது வாழ்வில் கிடைத்த வரம்’ என்கிற ரீதியில் பேட்டி அளித்து வந்தார்.

இதைக் கண்டு டென்சனான அஜீத் நேற்று தனது மேனேஜர் மூலம் ட்விட்டர் பக்கத்தில் மறுபடியும் சிவா இயக்கத்தில் நடிக்கும் உத்தேசம் இல்லவே இல்லை. அடுத்த இரண்டு படங்களும் போனிகபூர் நிறுவனம் தயாரிக்கும், விநோத் இயக்கும் படங்களுக்குத்தான். எனவே வேறு படங்கள் குறித்து பரவும் செய்திகளை அறவே நம்பவேண்டாம்’...இப்படிக்கு அஜீத்குமார் டீம் என்றொரு பதிவை வெளியிட்டார்.