அஜித்தின் 'குட் பேட் அக்லீ' ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு! காத்திருக்கும் செம சம்பவம்!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கோலிவுட் திரையுலகில், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் அஜித். இவர் நடிப்பில் வெளியாக உள்ள விடாமுயற்சி மற்றும், 'குட் பேட் அக்லீ' படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 'விடாமுயற்சி' பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வெளியானதால், 'குட் பேட் அக்லீ' ரிலீஸ் தாமதம் ஆனது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக, லைகா நிறுவனம் அறிவித்த நிலையில், இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட காத்திருந்த ரசிகர்கள் ஏமார்ந்து போனார்கள்.
'விடாமுயற்சி' ரசிகர்களை கைவிட்டாலும், 'குட் பேட் அக்லீ' இந்த ஆண்டு பொங்கலுக்கு வருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதற்க்கு வாய்ப்புகள் இல்லை என்றே... சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.
அதே சமயம் 'விடாமுயற்சி' பொங்கல் ரேஸில் இருந்து விலகியதால், இந்த ஆண்டு பொங்கலுக்கு அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கிறது. குறிப்பாக பாலா இயக்கியுள்ள 'வணங்கான்' திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. அதே போல் 'வீர தீர சூரன் பார்ட் 2', 'நேசிப்பாயா', 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களும் பொங்கலை டார்கெட் செய்து ரிலீசுக்கு கார்த்திருக்கிறது. ஒரு சில படங்கள் பொங்கல் ரேஸை விட்டு பின்வாங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தை பெற்றபின் கும்முனு மாறிய அமலா பால்! மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
இந்நிலயில், சற்று முன் படக்குழு 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் அதிகார பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தை ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் பண்ண போவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பார்வதி தேவியாக மாறி பிரமிக்க வைத்த காஜல் அகர்வால்! 'கண்ணப்பா' பட போஸ்டர் வைரல்!
'குட் பேட் அக்லீ' திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்க்கு முன்பாகவே ரிலீஸ் ஆக உள்ளது. அஜித் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தை, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க - திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய 'விடாமுயற்'சி ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகுமா? அல்லது மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.