பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இன்று ரிலீசாகி உள்ளது. இப்படத்தை பார்க்க அதிகாலையிலேயே அஜித் ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.
வலிமை படத்தின் முதல் பாதி செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்களும், நெட்டிசன்களும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இடைவேளையின் போது வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஹூமா குரேஷியின் நடிப்பும் வேறலெவலில் இருப்பதாக டுவிட்டர் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் நடிப்பு, ஆக்ஷன் எல்லாம் வெறித்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வலிமை படத்தின் முதல் பாதி குறித்து டுவிட்டரில் பதிடப்பட்டு வரும் விமர்சனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்
