பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் இருவரின் படங்களில் எந்த நடிகரின் படம் வசூலைக் குவித்து சாதனை படைத்தது என்று  சோசியல் மீடியாவில் இருக்கும் ட்ராக்கர்ஸ்  பேட்ட படத்தின் வசூலை மிஞ்சியது விஸ்வாசம் என சொல்லி வந்தனர் வந்தனர்.  

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தங்களின் தயாரிப்பில் வெளியான பேட்ட படம் வெளியான 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தை வைத்தே வசூல் விவரத்தை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்,   

இதற்க்கு முன்பாகவே, விஸ்வாசம் படத்தை வெளியிட்ட "கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம்" விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூலித்திருப்பதாக  அறிவித்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருக்கும் "எஸ்.ஜே. சினிமாஸ்" தியேட்டர்  நிறுவனர் வருண் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீபாவளிக்கு தளபதி விஜய்யின் சர்கார் பட வசூலை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்துவிட்டதாகவும், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 பட வசூலை முறியடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஸ்வாசம் தான் உண்மையான பிளாக்பஸ்டர் படம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் வருண் கூறியுள்ளார்.

இதேபோல திருப்பூரில் ஒரு தியேட்டரில் சர்கார் படம் 4 வாரங்களில் 17 லட்சம் ரூபாய் நிகர வசூலித்தது. அதே தியேட்டரில் விஸ்வாசம் 8 நாட்களில் 26 லட்ச ரூபாய் நிகர வசூலாக கடந்து சாதனை படைத்துள்ளதை தியேட்டர் நிர்வாகமே அறிவித்தது.

இப்படி பல தியேட்டர்களில் விஸ்வாசம் அசால்ட்டாக சாதனை நிகழ்த்தியதற்கு அஜித் ரசிகர்களே காரணம் என சொல்லப்படுகிறது.